பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது!!!

பொறியியல் படிப்பின் மாணவர்கள் சேர்க்கைக்கான பதிவுகள் இன்று தொடங்கியது. மாணவர்கள் தங்களின் பதிவுகளை www.annauniv.edu/tnea2018 என்ற வெப்சைட் மூலமாகச் செய்துகொள்ளலாம்.

2018-19ம் கல்வி ஆண்டில் பொறியியல் கல்வி பயில மாணவர்கள் தங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவுகள் இன்று தொடங்கி இம்மாதம் 30ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் www.annauniv.edu/tnea2018 என்ற இணையத்தளத்தை உபயோகித்துப் பதிவு செய்துகொள்ளலாம். இணையவசதி இல்லாத மாணவர்கள் பொறியியல் மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழகம் முழுவதும் 49 இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவு செய்யலாம். இந்தச் சேர்க்கை பதிவுகள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக இணையதளத்திலேயே கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இந்த ஆண்டு முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளனர்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்லைன் கலந்தாய்வு குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால், மாணவர்கள் 044-22359901 அல்லது 044-22359920 என்ற இலவச தொலைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

×Close
×Close