பத்திரப்பதிவில் நேரடி முறையையும் பின்பற்ற உத்தரவிடவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் பத்திரப்பதிவுத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த எம். சின்னராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில் தமிழக பத்திரப்பதிவுத்துறை ஏற்கனவே ஆன்லைன் வாயிலாகவும் அதேபோல நேரடியாகவும் பத்திரங்களைப் பதிவு பதிவு செய்து வந்தது என்று தெரிவித்துள்ளார். கடந்த 2018 பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் மட்டுமே பத்திரப்பதிவு நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் பத்திரப்பதிவு செய்வதற்கான போதுமான மென்பொருள்கள் பத்திரப்பதிவுதுறையிடம் இல்லை என்றும் பத்திரப்பதிவு துறை ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் பத்திரப்பதிவில் ஆவணங்களை பாதுகாக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் மதிப்புமிக்க ஆவணங்கள் தவறாக கையாளப்பட வாய்ப்பு உள்ளது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். ஆவணங்கள் தவறுதலாக கையாளப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்று நிர்ணயிக்கப்படவில்லை என்றும் ஆன் லைன் பதிவில் பல்வேறு பிரச்சனை உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை மேம்படுத்தும் வரை நேரடியாக பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்கவேண்டும் என்றும் ஆன்லைன் மூலம் தான் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பத்திரப்பதிவுத்துறை இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.