online game online money game :ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாடி தோற்றதால் மனமுடைந்து கல்லூரி மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நித்தீஷ். இவர் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிசிஏ படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருந்து வந்த நித்தீஷ் அவ்வப்போது தனது உறவினர் நடத்தி வரும் 'டாட்டூ' கடைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.அங்கு பகுதி நேர ஊழியராகவும் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல கடைக்கு சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் டாட்டூ கடைக்கு சென்று பார்த்தனர். அப்போது நித்திஷ்குமாரின் வாகனம் கடையின் வாசலில் நின்றுள்ளது. கடையின் கதவை வெகுநேரம் தட்டியும் திறக்கவில்லை. இதனையடுத்து கடையின் உரிமையாளர் வந்து, மாற்று சாவியை போட்டு கடையின் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது நித்திஷ்குமார் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதை அடுத்து போலீசாருக்கு கடை உரிமையாளர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற அமைந்தகரை போலீசார், நிதிஷ்குமார் உடலை கைப்பற்றினர். அவரது கையில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.தான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்திருந்துள்ளார் நித்தீஷ். அதில் தான் ஆன்லைன் கேம்கள் விளையாடியதாகவும், அதன் மூலம் தனது சேமிப்பு பணம் முழுவதையும் இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.தோற்ற காரணத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தான் தற்கொலை செய்து கொள்வது தவறு எனவும், தனது பெற்றோர்கள், நண்பர்கள் காதலி ஆகியோர் எல்லோருக்கும் கடிதத்தில் மன்னிப்பு கேட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/10-26.jpg)
மேலும், ரம்மி சர்கிள், பப்ஜி, ஐபிஎல் போன்ற ஆன்லைன் கேம்களில் நிதிஷ்குமார் அடிக்கடி விளையாடி வந்ததாகவும் அதில் தோற்று லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்ற குறிக்கோளில் தான் பணிபுரிந்த டாட்டூ கடையில் உள்ள பணத்தை வைத்து ‘கேஸ்ட்ரோ க்ளப்’ என்ற ஆன்லைனில் விளையாடியுள்ளார். அதிலும் தோற்ற காரணத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடையில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கேம் விளையாடி அதையும் தோற்றுவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் எனவும் நித்தீஷ் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். தனது தற்கொலைக்கு தான் மட்டுமே காரணம் எனவும் கூறியுள்ளார். தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் கேஸ்டோ கிளப் என்ற ஆன்லைன் கேமில் தோற்றுவிட்டதாக எழுதியுள்ளார்.தற்கொலை சம்பவம் தொடர்பாக நிதீஷ்குமாரின் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil