தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களைத் தடை செய்து தமிழ்நாடு அரசு இயற்றிய அவரசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதள் அளித்தார். இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களைத் தடை செய்யும் அவசரச் சட்டத்தை அரசிதழில் வெளியிட்டது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வந்தது. இதனால், அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க, நா.த.க, த.வா.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்து அவசரச் சட்டம் இயற்றியது. இதற்கு தமிழ்நாடு அமைச்சரவை கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட் இணையதள சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு இயற்றி அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்த அவசரச் சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அல்லது இரண்டுமே தண்டையாக விதிக்கப்படும்.
மேலும், சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.
செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிட தடை விதிக்கப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை விதிக்கப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியானதையடுத்து நடைமுறைக்கு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"