/indian-express-tamil/media/media_files/4eao0uo5ClElXoG7X4vX.jpg)
'ஊராட்சி மணி' என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் 155 340 வழங்கப்பட்டுள்ளது.
Tamil-nadu | cm-mk-stalin:தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக "ஊராட்சி மணி" என்ற அழைப்பு மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு மையம் திட்டத்திற்காக மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் அமைய உள்ளது.
'ஊராட்சி மணி' என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் 155 340 வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இந்த ஊராட்சி மணி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்திற்கான அழைப்பு மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடிப்படை விவரங்ககளை தெரிவித்திட கடந்த செப்டம்பர் 21ம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க கூடுதல் இயக்குனர் தலைமையில் காணொளி மூலம் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர்களின் விவரம் மற்றும் காலக்கெடு குறித்து ஆலோசனை வழகப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக தங்கள் புகார்களை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.