OP Ravindranath Kumar: ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சர் ஆவார் என்கிற எதிர்பார்ப்பு டென்ஷன் எகிற நகம் கடித்துக் கிடக்கிறார்கள், தேனியில் அவரது ஆதரவாளர்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் முன்கூட்டியே முகாமிட்டதால் ஏற்பட்ட நம்பிக்கை!
ஓ.பி.ரவீந்திரநாத் குமார், அதிமுக.வில் இளம் தலைவராக உருவாகி வருகிறார் என்பது மறுக்க முடியாத நிஜம். காரணம், அதிமுக அணியில் அத்தனை பேரும் தோற்றபோதும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒற்றை ஆளாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்க தமிழ்செல்வன் என இரு விஐபி.க்களை எதிர்த்து ஜெயித்தார்.
ஓ.பி.ரவீந்திரநாத் குமார்
மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் ஏக எதிர்பார்ப்பு காட்டுகிறார்கள். ஆனால் வைத்திலிங்கம் உள்பட சீனியர்கள் பலர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எனவே ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கினால், கட்சிக்குள் அதிருப்தி அலைகள் எழும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
எதுவாக இருந்தாலும் பிரதமர் மோடி முடிவு செய்வதைப் பொறுத்தே இதில் முடிவு அமையும். ஓ.பி.ரவீந்திரநாத் குமாரிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, ‘எல்லாம் அம்மாவின் ஆசி. பொறுத்திருங்கள்’ என்று மட்டும் கூறியிருக்கிறார்.
தந்தையைப் போலவே பணிவாக பேச கற்றுக் கொண்டிருக்கிறார்.