Advertisment

ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து வீடு வந்த 21 தமிழர்கள்

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் இந்திய குடிமக்களை வெளியேற்றுவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேஷன் அஜய் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 21 தமிழர்கள் வெள்ளிக்கிழமை (அக்.13) தமிழ்நாடு வந்தனர்.

author-image
WebDesk
New Update
 Tamil Nadu natives stranded in Israel reach home

சென்னை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி கலாநிதி வீராசாமி ஆகியோர் அவர்களை வரவேற்று வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

சென்னை வந்தடைந்த 14 பேரை விமான நிலையத்தில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் எம்.பி கலாநிதி வீராசாமி வரவேற்றனர், மீதமுள்ளவர்கள் கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கினர்.

Advertisment

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் இந்திய குடிமக்களை வெளியேற்றுவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேஷன் அஜய் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 21 தமிழர்கள் வெள்ளிக்கிழமை (அக்.13) வந்ததாக அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர், திருவாரூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, தேனி, கரூர், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் மற்றும் சென்னையைச் சேர்ந்த 21 பேர் இஸ்ரேலில் இருந்து புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 14 பேர் சென்னையையும், ஏழு பேர் கோவையையும் மதியம் அடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி கலாநிதி வீராசாமி ஆகியோர் அவர்களை வரவேற்று வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இதற்கிடையில், போரினால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆசிய நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 114 பேர் அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களையும் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாக, புலம்பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நல ஆணையர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Operation Ajay: 21 Tamil Nadu natives stranded in Israel reach home

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக ஹெல்ப்லைன் எண்களை அறிவித்து, அதன் இணையதளத்தில் விவரங்களை வழங்கியுள்ளதாக ஆணையரகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டினரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட விவரங்கள் மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு, அவர்களின் வெளியேற்றத்தை விரைவுபடுத்துகிறது, மேலும் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதற்காக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன, கமிஷனர் மேலும் கூறினார்.

முன்னதாக வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் புதன்கிழமை ட்விட்டர் எக்ஸில், “இஸ்ரேலில் இருந்து திரும்ப விரும்பும் எங்கள் குடிமக்கள் திரும்புவதற்கு வசதியாக #OperationAjay ஐத் தொடங்குகிறோம்.

சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள நமது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Israel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment