Advertisment

‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0’ காவல்துறை அதிரடி நடவடிக்கை; 4 நாளில் 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது

கஞ்சா, குட்கா, தடை செய்யப்பட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை நடத்திய ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையில், 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 25,295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0’ காவல்துறை அதிரடி நடவடிக்கை; 4 நாளில் 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது

தமிழகத்தில் கஞ்சா, குட்கா, தடை செய்யப்பட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை நடத்திய ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையில், 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 25,295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் கஞ்சா, குட்கா, மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் சென்ற ஆண்டு 06.12.20221 முதல் ஆபரேஷன் க்ஞ்சா வேட்டை 1.0 மற்றும் 2.0 என்ற காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அதிரடி நடவடிக்கைகளின்போது, 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25,295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்கள் பயன்படுத்திய 1,743 இரு சக்கர வாகனங்களும் 145 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல், 36,875 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு, 521 டன் குட்கா மற்றும் அவர்கள் பயன்படுத்திய 618 இரு சக்கர வாகனங்களும் 487 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா மற்றும் குட்கா வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் 4,023 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 616 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் தொடர் அதிரடி நடவடிக்கையாக கஞ்சா வேட்டை 3.0 தமிழகம் முழுவதும் 12.12.2022 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும் சட்ட விரோதமாக அவர்கள் வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தும் குற்றச் செயலின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று இதன்மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment