Edappadi K Palaniswami | TN Budget | தமிழ்நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட் கானல் நீர் என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இதுகுறித்து அவர், “திமுக அரசின் கனவு பட்ஜெட் என்பது கானல் நீர் போன்றது. இது மக்களுக்கு பயன் தராது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கிராமப் புறங்களின் சாலைகளை சீரமைக்க போதிய நிதி வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சமூகநீதி - மொழி - கல்வி - தொழில் வளர்ச்சி ஆகியவற்றை அடிநாதமாகக் கொண்டு, நம் திராவிட மாடல் அரசின் அடுத்த பாய்ச்சலுக்கான நிதி நிலை அறிக்கையாக அமைந்துள்ள 2024 - 2025 நிதி நிலை அறிக்கையை வரவேற்று மகிழ்கிறோம்.
டிடிவி தினகரன்
‘மாபெரும் தமிழ்க்கனவு’ எனும் பெயரில் தாக்கலாகியிருக்கும் நிதிநிலை அறிக்கை தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றும்
தி.மு.க அரசின் பகல் கனவு! #TNBudget2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“