Edappadi K Palaniswami | அ.தி.மு.க தகவல தொழில்நுட்ப அணியின் டவீட்டை ரீட்வீட் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, “மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்; ரூ.3.50 லட்சம் கோடி கடன் என்ன ஆனது” எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
மேலும், “நிதி பற்றாக்குறை என்ற பல்லவியை பாடாமல் கடன் வாங்கிய மூன்றரை லட்சம் கோடியில் புதிய பேருந்துகள்
உடனடியாக வாங்கவும்; பழுதடைந்த பேருந்துகளை பழுதுபார்க்கவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து, “மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. பின்புற இருக்கையில் இருந்து நடத்துனர் தூக்கி வீசப்பட்டார், தானாக உருண்டு ஓடிய பேருந்து சக்கரம், கழன்று விழந்த பேருந்து படிக்கட்டு என அந்தச் செய்திகள் நீண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“