கோவை மாவட்ட, டவுன் காஜி நியமனம் தொடர்பாக, உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி நடைபெற்ற நியமனக்குழு ஆலோசனைக்குத் தக்னி முஸ்லிம் சமூகத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மாமன்னர் ஹைதர் அலி காலத்தில் இருந்தே உருது மொழியை தாய்மொழியாகக் கொண்ட தக்னி முஸ்லீம்கள் டவுன் காஜி பதவியில் இருக்கின்றனர். பாரம்பரிய உரிமையை பறிக்கும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வருகிற ஜூலை 9, 2025 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து, உரிமை மீட்பு கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய தக்னி ஜமாத் நிர்வாகிகள், மொஹல்லாஹ் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஒன்று கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். நாகமொஹல்லாஹ் பள்ளிவாசல் தலைவர் அப்துல் நயீம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. உரிமை மீட்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.