7 பேர் விடுதலை செய்வதில் ஆளுநர் தாமதம் காட்டி வருவதால் வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளர் உட்பட முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 போ் விடுதலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநா் பன்வாரிலால் புரோகித் காலம் தாழ்த்தி வருவதாக மதிமுக தலைவர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் :
இதன் காரணமாக அவர் தலைமையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி, வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் பலரும் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.
12.30 PM : திமுக வை சேர்ந்த டி.கே.எஸ் இலங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்பு.
10.30 AM : ஆளுநர் மாளிகை அருகே உள்ள சென்னை சின்னமலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
10.00 AM : இந்த போராட்டத்தை தடுக்க முயன்றால், மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்தது போல் பெரிய போராட்டம் நடக்கும் என்று போலீசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் வைகோ
9.22 AM : இந்த முற்றுகை போராட்டம் அறிவிப்பை முன்னிட்டு ஆளுநர் மாளிகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
8. 50 AM : இந்த போராட்டத்தில், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மே 17 உட்பட 70 அமைப்புகள் பங்கேற்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
8. 40 AM : இந்த முற்றுகை போராட்டத்திற்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.