ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் : பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக கண்டன முழக்கம்

7 பேர் விடுதலை செய்வதில் ஆளுநர் தாமதம் காட்டி வருவதால் வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளர் உட்பட முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 போ் விடுதலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநா் பன்வாரிலால் புரோகித் காலம் தாழ்த்தி வருவதாக மதிமுக தலைவர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் : இதன் காரணமாக அவர் தலைமையில், இன்று காலை […]

opposition party protest, ஆளுநர் மாளிகை
opposition party protest, ஆளுநர் மாளிகை

7 பேர் விடுதலை செய்வதில் ஆளுநர் தாமதம் காட்டி வருவதால் வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளர் உட்பட முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 போ் விடுதலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநா் பன்வாரிலால் புரோகித் காலம் தாழ்த்தி வருவதாக மதிமுக தலைவர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுநர் மாளிகை
போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் :

இதன் காரணமாக அவர் தலைமையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி, வைகோ தலைமையில் எதிர்கட்சிகள் பலரும் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.

12.30 PM : திமுக வை சேர்ந்த டி.கே.எஸ் இலங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்பு.

10.30 AM : ஆளுநர் மாளிகை அருகே உள்ள சென்னை சின்னமலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

10.00 AM : இந்த போராட்டத்தை தடுக்க முயன்றால், மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்தது போல் பெரிய போராட்டம் நடக்கும் என்று போலீசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் வைகோ

9.22 AM : இந்த முற்றுகை போராட்டம் அறிவிப்பை முன்னிட்டு ஆளுநர் மாளிகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

8. 50 AM : இந்த போராட்டத்தில், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மே 17 உட்பட 70 அமைப்புகள் பங்கேற்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

8. 40 AM : இந்த முற்றுகை போராட்டத்திற்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Opposition parties rally towards raj bhavan live updates

Next Story
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்புதிய காற்றழுத்த தாழ்வு நிலை... மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com