/tamil-ie/media/media_files/uploads/2019/08/20170429_ASP003_0.jpg)
Tamil Nadu News Today Updates: தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் முக்கிய எதிர்கட்சிகள் ஒரு நாள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்இந்நிலையில், இன்று ஒரு படி மேலாக முக்கிய எதிர்க் கட்சி தலைவர்கள் ஒரு குழுவாக குலாம்நபி ஆசாத் தலைமையில் இன்று ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ளனர்.
இந்த பயணத்தில் 9 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சீதாராம் யெச்சூரி,டி.ராஜா, திமுக சார்பில் திருச்சி சிவா, ஜனதா தளம் கட்சி சார்பில் சரத் யாதவ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பயணம் செய்ய உள்ளனர்.இன்றைய செய்திகள்
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines : தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.
Delegation of opposition leaders comprising Rahul Gandhi, Ghulam Nabi Azad, D Raja, Sharad Yadav, Manoj Jha, Majeed Memon, and others that had reached SRINAGAR has been sent back. #JammuAndKashmir
— ANI (@ANI) August 24, 2019
மற்றும் ஸ்ரீநகரை அடைந்த ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், டி ராஜா, ஷரத் யாதவ், மனோஜ் ஜா, மஜீத் மேமன் அடங்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது .
தமிழகத்தில் நுழைந்துள்ள தீவிரவாதிகள் அவர்களாகவே வெளியேற வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேட்டியளித்துள்ளார். தற்போது, இருக்கும் அசாதாரண சூழலை தமிழக காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் அவசியம் ஏற்படும் சமயத்தில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Delhi: Former Union Minister and Senior BJP leader Arun Jaitley passes away at AIIMS. pic.twitter.com/pmr4xiyqYV
— ANI (@ANI) August 24, 2019
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லி இன்று காலை 12 மணி அளவில் காலமானார்.
Opposition leaders D Raja, Sharad Yadav,Majeed Memon and Manoj Jha onboard flight to Srinagar.Opposition delegation including Rahul Gandhi are visiting Jammu & Kashmir today. pic.twitter.com/a5gxyy2i2o
— ANI (@ANI) August 24, 2019
எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் விமானத்தில் செல்லும் காட்சி தற்போது வெளியாகி உள்ளன.
மத்திய அரசாங்கம் சொல்வது போல் ஜம்மு- காஷ்மீர் மக்கள் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து நடவடிக்கையை ஏற்றுக் கொண்டுவிட்டனர், இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது என்றால், நாங்கள் செல்வதில் என்ன பிரச்னை எற்படப் போகிறது என்ற வாதங்களை எதிர்க் கட்சிகள் முன்வைக்கின்றனர்.
சற்று நாட்களுக்கு முன் சரிவை சந்தித்த தங்கத்தின் விலை இன்றும் மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்தது . சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 29,440 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி சமயத்தில் ரூ.40,000 வரை செல்லலாம் என்ற பொதுவான கருத்து பரவி வருகிறது .
Congress leader Rahul Gandhi onboard flight to Srinagar. A delegation of Opposition leaders, including Rahul Gandhi, are visiting Jammu & Kashmir today. pic.twitter.com/ixBkANgksg
— ANI (@ANI) August 24, 2019
இன்று ஜம்மு-காஷ்மீர் செல்லும் எதிர் கட்சி குழுவில் ராகுல் காந்தி கலந்து கொல்வார? மாட்டாரா ? என்ற கேள்வி எல்லோரிடத்திலும் இருந்து வந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி கஷ்மிர்க்கு செல்வது உறுதி ஆகியவிட்டது என்பதை இந்த ட்வீட்டால் கணிக்க முடிகிறது.
நேற்று கோவை மாநகர்த்தைத தொடர்ந்து இன்று சிறப்புக் காவல் படை வேலூரில் கண்காணிப்பைத் தீவிரப் படுத்தியுள்ளனர். பரதராமி, கிறிஸ்டியன் பேட், வனியாம்படி, அம்பூர், வாலாஜா மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களில் 200 க்கும் மேற்பட்ட காவல்படை தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
எதிர்க் கட்சியின் பயணத்திற்கு ஜம்மு -காஷ்மீர் நிர்வாகம் தங்களது ஆட்சேபனையைத் தெரிவித்து இருக்கிறது . உங்கள் பயணத்தால் கட்டாயம் இங்கு அமைதி பாதிக்கப்படும் என்றும், அசாதாரண சூழல் உருவாகும் என்று ட்விட்டரில் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ட்வீட் செய்துள்ளது.
Tamil Nadu news today updates: நாட்டின் பொருளாதாரம் மந்தமாக உள்ளதாக எழுந்த தகவலைத் தொடர்ந்து, அதற்கு விளக்கம் அளிக்கும் பொருட்டு டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். தேக்க நிலையை சரி செய்ய பல பொருளாதார செயல்முறைகளை நட்டு மக்களிடம் எடுத்துரைத்தார்.
கோவையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து, கோவை மாநகரம் முழுவதும் நேற்று உச்ச கட்ட பாதுகாப்பில் இருந்தது. தொடர்ந்து செய்திகளைத் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights