Advertisment

சின்ன முட்டத்தில் புதிய பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கறுப்பு கொடி கட்டிய மீனவர்கள்!

கன்னியாகுமரி சின்ன முட்டத்தில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைக்க மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Opposition to the construction of a new petrol station in Chinna Muttam

சின்ன முட்டத்தில் மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மீன்பிடித் துறைமுகத்தை 300க்கும் அதிகமான விசைப் படகுகள் தங்குத் தளமாக கொண்டுள்ளன.

Advertisment

மேலும், நாட்டு படகுகளும்,படகு கட்டும் பணிமனையும் கடற்கரையில் உள்ளது. இதனருகே கடற்கரை பகுதியில் இருந்து 24 மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ள பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிராக சின்னமுட்டம் புனித தோமையர் தேவாலய பங்கு மக்கள் அனைவரும் கடந்த 7 நாள்களாக தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (ஆக.17) அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கபபட்டன. மீனவர்கள் தங்களின் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும் இன்று விசைப்படகுகள், நாட்டு படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்தப் பகுதியில் உள்ள ஆட்டோக்களும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் த.இ. தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Protest Kanyakumari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment