எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
கவன ஈர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக கவர்னர் தான் தீர்மானம் கொண்டுவந்தார் என்று கூறினார்.
அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு இன்று அரசு தனிதீர்மானம் கிடைத்தது, இதன் காரணமாக எந்த விதமான கவன ஈர்ப்பை எதிர்த்தார். ஆனால் இன்றே எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பேரவையில் வலியுறுத்துகிறார்கள்.
இதையடுத்து, சபை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி கவன ஈர்ப்பு கொண்டுவரலாம் என்று வாய்ப்பு வழங்கினார். அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி எழுந்து, துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக பேரவையில் கருத்துக்களை பதிவு செய்தார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில், ஆர்.பி.உதயகுமாரை இதுவரை துணைத்தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருக்கிறோம், ஆனால் எங்கள் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறியிருக்கிறோம் என்பதை பதிவு செய்தார்.
நாங்கள் அவையில் பேசுவது எவையும் ஊடகங்களுக்கு வருவதில்லை. நாங்கள் எழுப்பும் கேள்விகளும், அமைச்சர்களுக்கான பதில் ஆகியவைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆனால் சபாநாயகர், வழக்கு தொடர்பாக நான் எதுவும் பேசவில்லை என்றும், தொடர்ந்து அவைமரபுகள் எல்லாம் கடைபிடித்து வருகிறது என்று பதிவுசெய்தார்.
அதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தேர்தலில் வாக்குறுதி அளித்துளீர்கள், அதில் 85 சதவீதம் வாக்குறுதி நிறைவேற்றியுள்ளதாக கூறியுளீர்கள், அதற்கான கேள்விகளை நாங்கள் எழுப்பும்போது, அதைப்பற்றி எந்தவித தகவல்களும் ஊடகங்கள் வாயிலாக வரவில்லை.
சட்டசபையின் நிகழ்வுகளின் நேரலை தகவல்கள் அனைத்தையும் வழங்கவேண்டும் என்று பேரவையில் வலியுறுத்தினார்.
ஆனால் இந்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
"நாங்கள் வைக்கின்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், வெளிநடப்பு செய்து எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்வோம்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil