/tamil-ie/media/media_files/uploads/2020/12/ops.jpg)
ops admk ops speech : திட்டம் மற்றும் வளர்ச்சிதுறை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான 6 நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஓ பன்னீர்செல்வம், “பெண்களுக்கு தமிழக அரசு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு எதிராக அரங்கேறும் வன்முறைகளை முற்றிலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து நிற்க அனைத்து அரசு உயரதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து இந்த அரசு செயல்படும். ஆண் இரண்டரை ஆண்டும் பெண் இரண்டரை ஆண்டும் அரசை ஆண்டல் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நான் சிந்தித்தேன்” எனக் கூறினார்.
தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், சமீபத்தில் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து பதில் கொடுத்தபோது, ``ரஜினி அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறோம். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படும்" என்று பேசினார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.