scorecardresearch

ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக தலைமையகம்

அதிமுக கட்சி கொடி மற்றும் பெயரை பயன்படுத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு அதிமுக தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக தலைமையகம்

அதிமுக கட்சி கொடி மற்றும் பெயரை  பயன்படுத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு முன்னாள் முதல்வர்  பன்னீர் செல்வத்திற்கு அதிமுக தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதிமுகவில் இரட்டை தலைமை சிக்கல் இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுந்தது. இந்த பிரிவில், அதிமுக பொதுக்குழு கூட்டபட்டது. முதல் பொதுக்குவை பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறகணித்தனர்.  தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.

இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பன்னீர் செல்வம். இந்நிலையில் நேற்று பன்னீர் செல்வம் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் “ எடப்பாடி வேண்டுமானால் தனிக் கட்சி ஆரம்பித்து நிரூபிக்கட்டும் “ என்று சவால் விடுத்தார். இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுக.,வின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டும், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என குறிப்பிடுவது குறித்தும் பன்னீர்செல்வ்திற்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops admk sends notice to him