ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செந்தில்முருகன் வேட்பாளராக களமிறக்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
27-ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படும் என்று தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளாரக தென்னரசு போட்டியிடுவார் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிருவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.