Advertisment

6 மாணவர்கள் மரணம்: திமுக ஆட்சியின் மணல் கொள்ளையே காரணம் - ஓ.பி.எஸ் பகீர்

தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்ததற்கு திமுக ஆட்சியில் திருட்டு மணல் அள்ளப்பட்டதுதான் காரணம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பகீர் குற்றம்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
OPS blames DMK, OPS blames DMK for death of six students, sand smugling in Tirupur, ஆற்றில் மூழ்கி 6 மாணவர்கள் மரணம், திருப்பூர், அமராவதி ஆற்றில் மூழ்கி 6 மாணவர்கள் மரணம், திமுக ஆட்சியின் மணல் கொள்ளையே காரணம், ஓபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு, OPS, o panneerselvam, dmk, aiadmk

தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்ததற்கு திமுக ஆட்சியில் திருட்டு மணல் அள்ளப்பட்டதுதான் காரணம் என முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் அமராவதி மூழ்கி 6 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 6 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததற்கு திமுக ஆட்சியில் திருட்டு மணல் அள்ளப்பட்டதுதான் காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த மணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திண்டுக்கல் மாவட்ட, மாம்பறை பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் சமை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் தாராபுரம் அமராவதி ஆற்றின் புதுப்பாலம் பகுதியில் வரும்போது வாகனத்தை நிறுத்திவிட்டு அமராவதி ஆற்றில் இறங்கி குளித்ததில் ஆறு சிறுவர்கள் உயிரிழந்தனர் என்பதும் அதற்கு காரணம் திமுகவினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டதுதான் என்று அப்பகுதி மக்கள் தெரிவிப்பதும் என்னை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாதம் 17ம் தேதி திருப்பூர் இடுவாய் கிராமம், அண்ணாமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த அமிர்தகிருஷ்ணன், ஸ்ரீதர், யுவன், மோகன், சக்கரவர்மன், ரஞ்சித், ஜீவா, சரண் ஆகிய 8 பேர் கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் அமராவதி ஆற்றில் இறங்கிக் குளித்ததாகவும் இவர்களில் ஜீவா, சரண் தவிர எஞ்சிய ஆறு பேரும் ஆற்றில் மூழ்கி பலியாகிவிட்டதாகவும் இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் ஆறு பேர்களின் உடல்களை மீட்டெடுத்து பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் இவர்களை காப்பாற்ற முயன்று படுகாயமுற்ற ஜீவா, சரண் ஆகியோர் தியணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்த விபத்திற்குக் காரணம் சம்பவம் நடந்த பகுதியில் எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறியதாகவும் முதல்வரின் நிவாரண உதவி கிடைக்க நடவடிககி எடுக்குமாறு வருவாய்த் துறையினருக்கு அறிவுரை வழங்கியதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், இதுவரை எந்தவித நிவாரண உதவியும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையில், விபத்திற்கு வேறுவிதமான காரணங்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களும் அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர். அதாவது, அண்மையில் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவதற்கு முன்பு மாணவர்கள் குளித்த பகுதியில் முழங்கால் அளவுக்குத்தா தண்ணீர் இருந்ததாகவும் ஆழமான பகுதியாக அது இல்லை என்றும், தண்ணீர் குறைவாக இருந்த சமயத்தில் சுமார் இருபது அடி ஆழத்திற்கு திமுகவினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டு கடத்தப்பட்டதாகவும், பின்னர் ஆற்றிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டவுடன் அந்தப் பகுதி ஆழமான பகுதியாகிவிட்டதாகவும் இந்த மணல் திருட்டுதான் அப்பாவி மாணவர்களின் உயிரிழப்புக்குக் காரணம் என்றும் இதனை மூடி மறைக்கும் பணியில் ஆலூம் கட்சியினரும் அரசு நிர்வாகமும் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

மாணவர்களின் உயிரிழப்புக்கு திருட்டு மணல் அள்ளப்பட்டதும் அதனை அரசு ந்ரிவாகம் வேடிக்கைப் பார்த்ததும்தான் காரணம் என்பதாலும் உயிரிழந்தவர்களைச் சேர்ந்த அனைத்துக் குடும்பங்களும் மிக ஏழ்மை நிலையில் உள்ளதாலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 25 லடம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என்பதும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைத்துக் குடும்பங்களும் இளம் பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு தவித்துக்கொண்டிருக்கின்றன.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி இளம் பிள்ளைகள் உயிரிழப்புக்கு காரணமான திருட்டு மணல் அள்ளப்பட்டது குறித்து தீர விசாரித்து தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லடம் ரூபாய் நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Aiadmk Ops Cm Mk Stalin Tirupur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment