நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ராமநாதபுரதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறந்தாங்கியில் நேற்று காலை ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே பன்னீர் செல்வம் கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, பன்னீர்செல்வம் மீது அறந்தாங்கி போலீசாரிடம் கண்காணிப்பு குழு அதிகாரி அருள் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"