தமிழ்நாட்டில் அனுமதி அங்கீகாரம் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு ஆணைக்கட்ட முடியாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தார். ஆனால், அவருக்கு முக்கியத்துவம் அளிக்காததால் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கே திரும்பினார்.
இந்நிலையில், டெல்லியில் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் மைத்ரேயன் மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் கூறியதாவது:
"தமிழ்நாடு முழுவதும் கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். மேகதாது அணை விவகாரம் குறித்து ஏற்கெனவே விரிவான அறிக்கை கொடுத்துள்ளேன். தமிழ்நாடு அரசின் அனுமதி, அங்கீகாரம் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது. இதுதான் அரசியல் சட்டத்தில் உள்ளது", என்றார்.
பின்னர், அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதற்கு, "மைத்ரேயன் எங்கிருந்தாலும் வாழ்க", என்று ஓபிஎஸ் பதிலளித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil