டிவி விவாதங்களை புறக்கணிக்க அதிமுக முடிவு; இபிஎஸ்- ஓபிஎஸ் கூட்டறிக்கை

OPS-EPS announce here after ADMK wont participate in TV debates: ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது என ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டறிக்கை

அதிமுக இனிமேல் தொலைக்காட்சி மற்றும் சமூக தொடர்பு ஊடக விவாதங்களில் பங்கேற்காது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மக்களின் அடிப்படை தேவைகள், தினசரி பிரச்சனைகள் பல இருக்கின்ற போது, அதை பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல் ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்கக் கூடிய ஊடக நிறுவனங்கள், அதிமுக-வின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும், மனம் போன போக்கில் ஊடக அறத்திற்குப் புறம்பாகவும், கழகத் தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்ற விதத்திலும், விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது, உள்ளபடியே மனதிற்கு வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

மேற்சொன்ன காரணங்களால், ஊடக விவாதங்களில் அதிமுக-வின் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதையும் எங்களை பிரதிநிதிப்படுத்துவதாக கூறிக்கொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எனவே, கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாக கருத்துக்களை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும், வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்றும் அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் அன்புகூர்ந்து கேட்டுக்கொள்கிறோம்.

இந்த முக்கியமான விவகாரத்தில், தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்களின் மேலான ஒத்துழைப்பை அன்புடன் எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ops eps announce here after admk wont participate in tv debates

Next Story
மேற்கு மாவட்டங்களில் திமுகவை பலப்படுத்த மாஸ்டர் பிளான்DMK master plans to capture Kongu districts, west districts, dmk plans to capture west districts, salem, coimbatore, tirupur, erode, dharmapuri, krishnagiri, namakkal, karur, neelagiri,மேற்கு மாவட்டங்களில் திமுகவை பலப்படுத்த திட்டம், திமுக, முக ஸ்டாலின், அதிமுக, aiadmk, dmk, mk stalin, dmk master plans
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com