அதிமுகவில் அமைப்புச் செயலாளர்கள், கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அதிரடியாக மாற்றம் செய்து புதிய நிர்வாகிகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இன்று கூட்டாக அறிவித்துள்ளனர்.
அதிமுகவில் அமைப்புச் செயலாளர்கள், கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அதிரடியாக மாற்றம் செய்து புதிய நிர்வாகிகளை அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இன்று கூட்டாக அறிவித்துள்ளனர். இதில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகை விந்தியா அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக கூடுதல் தலைமைக் கழக நிர்வாகிகளாகவும் துணை நிர்வாகிகளாகவும் கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளது.
அதிமுக கழக அமைப்புச் செயலாளர்களாக, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன், திருப்பூரைச் சேந்த முன்னாள் எம்.பி. சி. சிவசாமி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் புத்திச் சந்திரன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ரத்தினவேல், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் மருதராஜ், தென்காசி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி கோ அரி, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பா.கணேசன், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசைமணி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பாப்புலர் முத்தையா, தென் சென்னை வடக்கு மாவட்டம், தியாகராயர் நகர், நடிகை விந்தியா ஆகியொர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அதிமுகவின் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள், எம்.ஜி.ஆர் பேரவை, ஆகிய அதிமுக கழக துணை அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"