ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், அந்தத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாக்குபதிவு பிப்ரவரி 27 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்த தொகுதி கடந்த முறையை போன்று காங்கிரஸிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதிமுக கூட்டணியில் இம்முறை ஜி.கே. வாசன் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸிற்கு ஒதுக்கப்படவில்லை.
இம்முறை அதிமுக களம் காண்கிறது. இதற்கு ஜி.கே. வாசன் ஆதரவு தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவை பெற அதிமுகவின் ஓ.பி.எஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் கமலாய வாசலில் காத்திருந்தனர்.
இரு தரப்பு ஆள்களையும் சந்தித்த பாஜக தலைமை எதுவும் சொல்லாமல் அனுப்பிவைத்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட ஆர்வம் காட்டுவதாக முதலில் செய்திகள் வெளியாகின.
அதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் குழுவும் அமைக்கப்பட்டது. இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக போட்டியிடும் என அறிவித்துள்ளார். பாஜக போட்டியிடும்பட்சத்தில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதனால் பாஜகவின் பதில் இந்த இடைத்தேர்தலில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்மகன் ஈவெராவிடம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யுவராஜா 8 ஆயிரம் வாக்குகளில் வெற்றியை இழந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/