EPS in Pasumpon | பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61ஆவது குருபூஜை நேற்று (அக்.30) நடந்தது. இதில் முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
அப்போது அவருக்கு எதிராக சிலர் கோஷமிட்டனர். மேலும் அவர் சென்ற கார் மீதும் செருப்பு வீசப்பட்டது. இதனை, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது” என்றார்.
மேலும் ஆளுனர் மு.க. ஸ்டாலின் மோதல் குறித்து பேசுகையில், “ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே இருக்கும் சட்டப் போராட்டத்தில் மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படையும் சூழல் இருக்கிறது.
ஆகவே இதனை தவிர்க்கும் வகையில், இருதரப்பிலும் உட்கார்ந்து பேசி சமூகமான முடிவு எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடையும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“