3 1/2 மணி நேரம் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்: சேலம் மாவட்டத்திற்கு தனி கவனிப்பு

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ஓ.பி.எஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன் செவ்வாய்க்கிழமை சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, சேலம் மாவட்டத்துக்கு தனிக் கவனம் செலுத்தினார்.

3 1/2 மணி நேரம் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்: சேலம் மாவட்டத்திற்கு தனி கவனிப்பு
Tamil news live

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ஓ.பி.எஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன் செவ்வாய்க்கிழமை சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, சேலம் மாவட்டத்துக்கு தனிக் கவனம் செலுத்தினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மற்றும் தலைமைப் பொறுப்பாளர்களுடன் செவ்வாய்க்கிழமை சுமார் மூன்றரை மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது, சேலம் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் அங்கே உள்ள பிரச்னைகளைக் கேட்டு தனிக் கவனம் செலுத்தியுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் அனைத்து நிர்வாகிகளிடம் சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர், “அதிமுக தொண்டர்கள் நம்முடன்தான் இருக்கிறார்கள், அதிமுக தொண்டர்களுடன் சென்று வேலை செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும், எனவே எதிர்காலத்தைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை.” என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.

எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தை சேர்ந்த நிர்வாகிகளை ஓ. பன்னீர்செல்வம் முதலில் சந்தித்து அங்குள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் நிலவி வருவதால் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வம், புதியதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியது கவனம் பெற்றுள்ளது. மேலும், அந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும், எதிர்காலம் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் ஓ.பி.எஸ் கூறியிருப்பது அவர்களுடைய ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops held discussions with newly appointed office bearers special attention to salem district

Best of Express