சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஓ.பி.எஸ் கருத்துக்கு குவியும் விசுவாசிகளின் ஆதரவு!

ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று கூறினார். ஓ.பி.எஸ்ஸின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஓ.பி.எஸ்ஸின் விசுவாசிகள் அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

O Panneerselvam's loyalists support to him, ops, sasikala, vk sasikala, ops comment that reinduction of V K Sasikala into AIADMK, aiadmk, சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஓ.பி.எஸ் கருத்து, ஓ பன்னீர்செல்வம், அதிமுக, சசிகலா, tamilnadu politics, edappadi palaniswami, eps

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவருமான சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் கூறினார். இதையடுத்து, ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளரும், அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா குறித்து ஓ.பி.எஸ் கூறியதில் எந்த தவறும் இல்லை என்று ஊடகங்களிடம் புதன்கிழமை கூறினார்.

எம்.ஜி.ஆரின் பேரனும், அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளருமான ஜி.ராமச்சந்திரன், இரட்டைத் தலைமையால் கட்சி திறமையாக வழிநடத்தப்பட்டு வருவதாகவும், மற்ற தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசி குழப்பத்தை ஏற்படுத்துவதை தவிர்த்து அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆனால், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்து அவருக்கு அதிமுகவில் பதவி வழங்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் எந்த காலத்திலும் கூறவில்லை என்று ஜே.சி.டி பிரபாகர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

“சசிகலாவை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு கட்சி மேலிடத்திடம் இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எங்களை விவாதத்திற்கும் அழைக்கவில்லை. கூட்டம் கூட்டி விவாதம் வந்தால்தான் முடிவு எடுக்க முடியும்” என்று ஜே.சி.டி பிரபாகர் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார். கட்சி ஒரு குடும்பத்தின் கையிலோ அல்லது ஒரு தனி நபர் கையிலோ இருப்பதற்கு எதிரானவர் என்று ஓபிஎஸ் தெளிவுபடுத்தியுள்ளார். 2017-ல் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்ததில் பிரபாகர் முக்கிய பங்கு வகித்தார்.

ஓ.பி.எஸ்ஸின் கருத்துக்குப் பிறகு சில தலைவர்கள் ஊடகங்களில் பேசியது வேதனையை ஏற்படுத்தியதாகவும், இதைத் தவிர்த்திருக்கலாம் என்று சென்னையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் கூறினார்.

அதிமுகவில் சசிகலாவை சேர்க்கலாமா, செல்லலாமா,வேண்டாமா என்ற விவாதத்தை நடத்துவது குறித்து மட்டுமே ஓபிஎஸ் குறிப்பிட்டார். அவர் பேசியதன் அடிப்படையில் விவாதித்து முடிவெடுக்கலாம் என்று கூறியிருந்தார். அப்படி ஒரு விவாதம் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது? பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முடிவெடுக்கலாம். அதனால், ஓ.பி.எஸ் ஒரு பிரிவினரை ஆதரிப்பதாக தவறான எண்ணம் கொள்ளக்கூடாது என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறேன்” என்று ஜே.சி.டி. பிரபாகர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் விரும்புவதாகவும், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள், சசிகலாவுக்கு எதிரான ஓ.பி.எஸ்ஸின் முந்தைய கடுமையான நிலைப்பாட்டை நினைவு கூர்ந்தனர்.

அதிமுக பொன்விழா தொடக்க நாளில், தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில், அக்டோபர் 17ம் தேதி அதிமுக கொடியேற்றிய சசிகலா, அதிமுக பொதுச் செயலாளர் என்ற கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர், ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு சென்ற சசிகலா அங்கே எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளதாகக் கூறினார்.

இந்த சூழலில்தான், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று கூறினார். ஓ.பி.எஸ்ஸின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஓ.பி.எஸ்ஸின் விசுவாசிகள் அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ops loyalists support to him for comment that reinduction of v k sasikala into aiadmk

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com