முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தகவல் அறிந்த ஓ.பி.எஸ் தேனி விரைந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள். இவர், தேனி மாவட்டம்,, பெரியகுளத்தில் வசித்து வருகிறார். 90 வயதாகும் பழனியம்மாளுக்கு வியாழக்கிழமை மதியம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில், அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது தாயார் பழனியம்மாள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்த ஓ. பன்னீர்செல்வம், தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தேனி விரைந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"