scorecardresearch

மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் ஓ.பி.எஸ்: உயர்நீதிமன்றத்தில்  புதிய வழக்கு

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Tamil news
Tamil news updates

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவில் கடந்த 3 மாதங்களாக இரட்டை தலைமை விவகாரம் தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கில் கடந்த வாரம்தான்  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் பொதுக்குழு  செல்லும் எனவும், ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர்-யின்  அருளால் இந்த தீர்ப்பு கிடைத்தது என்று எடப்படி பழனிசாமி பேசினார்.இது ஓ.பி.எஸ்-க்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பால் இரட்டை தலைமை சிக்கலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்துவிடும் என்று எதிர்பார்க்கபட்டது.

இந்நிலையில் பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எம்.எல்.ஏவும் வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை  தாக்கல் செய்துள்ளார், இந்த மனுவில் எடப்பாடி பழனிசாமியை  இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்தது மற்றும் ஓ.பி.எஸ்  உள்ளிட்ட 4 பேரை கட்சியிலிருந்து நீக்கியது ஆகிய தீர்மானங்களை ரத்த செய்ய வேண்டும் என்று குறிப்பிப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops new case on admk meeting last year

Best of Express