ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் என்று ஓ.பி.எஸ். தரப்பு விளக்கம் அளித்துள்ளனர்.

ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் அறிவிப்பு விடுத்துள்ளார்.
இதைப்பற்றி ஓ.பி.எஸ்., ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியதாவது, “இந்த தேர்வு முறை எதுவும் சரியாக நடைபெறுவதில்லை என்பதை தெரிவிக்கிறோம். அதோடு, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி சின்னமாக இரட்டை இலை இருக்கிறது.
இப்படிப்பட்ட சின்னம் மக்கள் மனதில் இருந்து மறைந்துவிட கூடாது என்று ஓ.பி.எஸ்., ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை உறுதியாக இருக்கிறார்.
அப்படி இரட்டையிலை சின்னத்தின் முடக்கத்திற்கு நாம் காரணமாக இருந்துவிட கூடாது என்பதற்காக தான், இயக்கத்தின் நலன் கருதி தன்னலத்தை விட்டுவிட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார்”, என்று கூறுகிறார்.