டி.டி.வி தினகரன் குறித்த கேள்வி; ஓ.பி.எஸ் பதில் என்ன?

ஓ.பி.எஸ் உடன்‌ கைகோர்க்க வாய்ப்புள்ளது என டி.டி.வி தினகரன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, தனியாக பேசிக்கலாம் என திருச்சியில் ஓ.பிஎஸ் பதில்

டி.டி.வி தினகரன் குறித்த கேள்வி; ஓ.பி.எஸ் பதில் என்ன?

OPS reply to question about TTV comments: அ.தி.மு.க.,வின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் மறைவையொட்டி அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் சசிகலா இன்று நண்பகல் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தனது சகாக்களுடன் அஞ்சலி செலுத்தினார். 

மாயத்தேவர் மறைவையொட்டி அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்று நேரில் ஆறுதல் தெரிவிக்க விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷணன் ஆகியோரும் வந்தனர். அவர்களுக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.

இதையும் படியுங்கள்: திருச்சியில் மின் கம்பங்கள் சாய்வது தொடர்கதை; உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அதனைத் தொடர்ந்து அவரை சந்திக்க காத்திருந்த செய்தியாளர்கள் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பினர்.

ஓ.பி.எஸ் உடன்‌ கைகோர்க்க வாய்ப்புள்ளது என டி.டி.வி தினகரன் கூறியிருக்கிறாரே என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தனியாக பேசிக்கலாம் என்று செய்தியாளர்களை பார்த்து பதிலளித்து விட்டு சென்றார் ஓ.பிஎஸ்.

க. சண்முகவடிவேல் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops reply to question about ttv comments