அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடந்தது. இந்தப் பொதுகுழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழு நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அதிமுக உள்கட்சி பிரச்னை குறித்து கருத்துகள் எதுவும் தெரிவிக்க மாட்டோம். மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும், இரண்டு வாரங்களில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் எனத் உத்தரவிட்டு மனுவை தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில், பொதுக்குழு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனிநீதிபதி கிருஷ்ண ராமசாமி தேவையில்லாத கருத்துகளை தெரிவித்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
ஆகவே இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.
மேலும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை. எனினும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிபதி கிருஷ்ணனன் ராமசாமியிடம் பேசி அவரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழக்கை நாளை (ஆக.4) விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அமர்வு தலைமை நீதிபதி அமர்வை நாடியுள்ளது.
ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கை வேறு அமர்வுக்கு நீதிபதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆகையால் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil