எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக ஒன்று சேர, நாளை மறுதினம் தஞ்சையில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் சந்தித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவின் முன்னாள் தலைவரான ஜெ.ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிகார போட்டியினால் நான்கு பிரிவுகளாக கட்சி பிரிந்துள்ளது.
டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கிய நிலையில் ஓபிஎஸ் உடன் இணைந்து 4 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கட்சி வலுப்படுத்த இரட்டை தலைமை தேவை இல்லை என்ற கருத்து இபிஎஸ் ஆதரவாளர்களால் முன் வைக்கப்பட்டது.
இதனையடுத்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செந்து தீர்மானம் நிறைவேற்றினார்.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதாக கூறி அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களில் சட்ட போராட்டம் நடத்தினார். ஆனால் அனைத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்ததால், டிடிவி தினகரனை சந்தித்து ஒன்றினைந்து செயல்பட முடிவெடுத்தனர். இதனையடுத்து விரைவில் சசிகாலவையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil