ஜெ. தீபா குழந்தைக்கு பெயர் சூட்டு விழா: தங்கச் சங்கிலி அணிவித்து ஓ.பி.எஸ் மகன் வாழ்த்து | Indian Express Tamil

ஜெ. தீபா குழந்தைக்கு பெயர் சூட்டு விழா: தங்கச் சங்கிலி அணிவித்து ஓ.பி.எஸ் மகன் வாழ்த்து

ஜெ. தீபா- மாதவன் குழந்தை பெயர் சூட்டு விழாவில் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டார்.

ஜெ. தீபா குழந்தைக்கு பெயர் சூட்டு விழா: தங்கச் சங்கிலி அணிவித்து ஓ.பி.எஸ் மகன் வாழ்த்து

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா- மாதவன் தம்பதியினருக்கு கடந்தாண்டு அக்டோபர் 31-ம் தேதி குழந்தை பிறந்தது. அதனைத் தனது பிறந்த நாளான நவம்பர் 10-ம் தேதி அறிவித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார் தீபா.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 5) குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்களுக்கு ஜெ. தீபா அழைப்பு விடுத்திருந்தார். குறிப்பாக ஓ, பன்னீர்செல்வத்திற்கு ஜெ.தீபா தமது கணவர் மாதவனுடன் சென்று நேரில் அழைப்பு விடுத்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்று அழைப்பு விடுத்திருந்தார். ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.கவில் பரபரப்பு நிலவும் நிலையில், ஓ.பி.எஸ்ஸை ஜெ.தீபா நேரில் சந்தித்து அழைத்து விடுத்தார். “அரசியல் காரணங்களுக்காக அல்ல, குடும்ப நிகழ்வுக்காக ஓ.பி.எஸ் அவர்களை அழைத்திருக்கிறேன்” என்று தீபா விளக்கம் அளித்தார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று பெயர் சூட்டு விழா நடைபெற்றது. ஓ.பி.எஸ் சார்பில் அவரின் இளைய மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டு ஜெ.தீபாவின் குழந்தைக்கு தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops son jayapradeep attends j deepas baby naming ceremony