scorecardresearch

மோடியுடன் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லியில் பிரதமர் மோடியை, ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் சந்தித்து பேசினார்.

Leopard killed in MP Rabindranath garden after getting caught in electric fence
அதிமுக மக்களவை உறுப்பினர் ஓ.பி., ரவீந்திரநாத்

ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தனது 42-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அ.தி.மு.கவின் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பிரதமர் மோடியை, ரவீந்திரநாத் சந்தித்து பேசினார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது எம்.ஜி.ஆர் குறித்த புத்தகத்தை ரவீந்திரநாத் வழங்கி ஆசி பெற்றார்.

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.கவில் குழப்பமான சூழல் நிலவுகிறது. ஒன்றை தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகள் தீவிரமான நடைபெற்று வருகிறது.

தி.மு.க கூட்டணி, நாம் தமிழர், அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் வேட்பாளர்களை அறிவித்தனர். இதையடுத்து உச்ச நீதிமன்றம் நேற்று அ.தி.மு.கவின் பொதுக்குழு கூடி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் பிரதமரைச் சந்தித்தது பேசு பொருளாகி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops son o p ravindranath mp meets pm modi on his birthday

Best of Express