scorecardresearch

ஜெயலலிதா பற்றி விமர்சித்தால் அண்ணாமலை நடமாட முடியாது: ஓ.பி.எஸ் அணி திடீர் எச்சரிக்கை

‘ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது கர்நாடகா மாநிலத்தில் தெரிந்தால், சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்கும்’ என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

OPS Supporter Pugalenthi Press Meet about Annamalai BJP Tamil News
O. Panneerselvam Supporter V. Pugalenthi Press Meet

க.சண்முகவடிவேல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அதிமுகவின் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் வா.புகழேந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், “அண்ணாமலைக்கு என்ன ஆச்சுனு தெரியவில்லை, அவருக்கு மென்டலி பிராப்ளம்னு பேசிக்குறாங்க. என்னோட தாய் 100 மடங்கு, மனைவி 1000 மடங்கு உயர்ந்தவர் என்கிறார், இவரை யார் கேட்டது, காவலர்களும் அம்மாவை தெய்வமாக மதிக்கிறார்கள். ஓபிஎஸ் அல்லது வேறு யாராவது பாஜகவை பேசினார்களா?

அம்மாவை தவறாக பேசிய விவகாரம் கர்நாடகா மாநிலத்தில் பரவினால் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றுவிடும். அங்குள்ள தமிழர்கள் மதிக்கவே மாட்டார்கள். உங்களை கீழ்பாக்கத்திலோ அல்லது பெங்களூர் நிமான்சிலோ மருத்துவமனையிலோ சென்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

அம்மா இருந்தபோது அண்ணாமலை இப்படி எல்லாம் பேசி இருந்தால், இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிருப்பார்.
மத்தியில் பாஜக வை ஆட்சியில் அமர வைத்ததும், இறக்கியவரும் அம்மாதான். பாஜக தலைவரே பண்பாட்டை கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்கு நாவடக்கம் தேவை.

நேற்று அதிமுக கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஜெயக்குமார் முதலில் பாஜகவை திட்டியும் கூட்டத்திற்கு பிறகு பாஜக உடன் கூட்டணி தொடரும் என்கிறார். எடப்பாடி அணியில் உள்ள அனைவரும் அறை மென்டல்கள், முழு மென்டல்களாக உள்ளனர்.
அண்ணாமலைக்கு கடைசி எச்சரிக்கை அம்மா, எம்ஜிஆர் குறித்து பேசினால் இனி வெளியில் நடமாட முடியாத நிலையை நீங்கள் அடைவீர்கள்.

உள்ளாட்சி, நகர்புறம், சட்டமன்றம், நாடாளுமன்றம், இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் எடப்பாடி டேக்கிட் இட் ஈஸி பாலிசி என்றே இருக்கிறார். ஓபிஎஸ் என்கிற ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் அதிமுக எதிலும் வெற்றி பெற முடியாது. அதிமுக வேட்பாளரின் வார்டிலேயே வாக்குகள் பெற முடியவில்லை”

இவ்வாறு அவர் புகழேந்தி கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops supporter pugalenthi press meet about annamalai bjp tamil news