/tamil-ie/media/media_files/uploads/2023/03/tamil-indian-express-2023-03-11T144753.261.jpg)
O. Panneerselvam Supporter V. Pugalenthi Press Meet
எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச் செயலாளர் என குறிப்பிட்டால் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை பாயும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி எச்சரிக்கை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் உதகையில் ஓ.பன்னீர் செல்வம் அணி மற்றும் அ.ம.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓ.பி.எஸ் அணி சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி மற்றும் அ.ம.மு.க பொருளாளர் எஸ்.கே.செல்வம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, "பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எனக் குறிப்பிடுவதும், ஓ. பன்னீர்செல்வத்தை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எனக் குறிப்பிடுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச் செயலாளர் என குறிப்பிட்டால் அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை பாயும். தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்று புரியாமல் செய்யக் கூடாது. இவ்விவகாரத்தில் அண்ணாமலை தலையிடக் கூடாது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.