Advertisment

ஜெயலலிதா வீட்டை கட்சி சார்பில் வாங்க இ.பி.எஸ் உடன் படாதது ஏன்? ஓ.பி.எஸ் தரப்பு புது புகார்

ஜெயலலிதா வீட்டை கட்சி சார்பில் வாங்க இ.பி.எஸ் உடன்படாதது ஏன்? திமுக வெற்றி பெறவே இ.பி.எஸ் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர் – ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
ஜெயலலிதா வீட்டை கட்சி சார்பில் வாங்க இ.பி.எஸ் உடன் படாதது ஏன்? ஓ.பி.எஸ் தரப்பு புது புகார்

OPS supporters says EPS no accepting ADMK buying Jayalalitha House: ஜெயலலிதா வீட்டை கட்சி வாங்க எடப்பாடி பழனிச்சாமி உடன்படாதது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிட முடியாத நிலையை இ.பி.எஸ் தரப்பு உருவாக்கியுள்ளது என்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

Advertisment

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் குன்னம் ராமச்சந்திரன், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட ஏதுவாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் படிவம் ’ஏ’ மற்றும் ’பி’ ஆகியவற்றில் கையெழுத்து இட வேண்டாம். எனவே அதற்கான விண்ணப்ப படிவங்கள் தயாராகி விட்டதா என தலைமைக் கழக நிர்வாகி மகாலிங்கத்திடம், ஓ.பி.எஸ் கேட்கையில், இ.பி.எஸ் இது குறித்து கேட்டு சொல்வதாக கூறினார். ஆனால் அதற்கு பதில் வராத நிலையில், இது குறித்து இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதினார். ஆனால் ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என கூறி அதை நிராகரித்துவிட்டார்கள்.

இதையும் படியுங்கள்: ‘உங்கள் கடிதம் செல்லாது’: ஓ.பி.எஸ்-க்கு பதில் கடிதம் அனுப்பிய இ.பி.எஸ்

இதனால் அதிமுக தொண்டர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், இ.பி.எஸ்-ஐ வழிநடத்துபவர்களால் தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை முன்னதாகவே, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து அறிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல், திமுக வெற்றி பெற ஆசைப்படும் இ.பி.எஸ்-ஐ வழிநடத்துபவர்களால், தற்போது தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அடுத்ததாக, கழக ஊழியர்களுக்கு ஊதியம் தரும் படிவத்தில், பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ் கையெழுத்திட்டுள்ள நிலையில், இ.பி.எஸ் அதில் கையெழுத்திடாமல், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளார். இதனையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம், எனக் கூறினர்.

பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை மக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தினேன் என்று குன்னம் ராமச்சந்திரன் கூறினார்.

ஆனால், அந்த இல்லத்தை சட்ட ரீதியாக வென்றிருக்க கூடிய தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஓ.பி.எஸ் அவர்களை சந்தித்து, கட்சி மூலமாக நீங்கள் வேதா இல்லத்தை விலைக்கு வாங்கி, மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள் என கூறினர். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அதற்கு உடன்படவில்லை, என ஓ.பி.எஸ் எங்களிடம் கூறியுள்ளார் என்று ஓ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

அடுத்ததாக, கட்சியில் பொதுச்செயலாளர் இல்லாத நிலையில், அவைத்தலைவர் மற்றும் பொருளாளருக்கு தான் கட்சியும் சின்னமும் சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஓ.பி.எஸ்-க்கு தான் கட்சி சொந்தம் என்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment