அதிமுகவில் கடந்த 2 வாரமாக ஒற்றை தலைமை யார் என்பதில் இபிஎஸ் ஒபிஎஸ் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில். இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கபட்டிருந்த ஒபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவில் கடந்த வாரம் தொடக்கத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து கட்சியில் ஒறறை தலைமை யார் என்பதில் இபிஎஸ் ஒபிஎஸ் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசைனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கடந்த 23-ந் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை இபிஎஸ் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒ.பன்னீர்செல்வத்தின் பெயரை கூட மேடையில் பயன்படுத்தவில்லை. இதனால் கூட்டத்தில் இருந்து பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறியது அவர் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் தண்ணீர்பாட்டில்களை வீசியதும் அனைவரும் அறிந்த ஒன்று.
இதற்கு முன்பு மறைமுகமாக மோதிக்காண்ட இபிஎஸ் ஒபிஸ் ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு பின் நேரடியாகவே மோதிக்கொண்டு வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று காலை கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒபிஎஸ் பேனரை இபிஎஸ் ஆதரவாளர்கள கிழித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நிர்வாகிககள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தொண்டர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்றும், கிழிந்த பேனரை உடனே சரி செய்ய வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டது இதனைத் தொடர்ந்து கிழிக்கப்பட்ட ஒபிஎஸ் பேனர் தற்போது சரி செய்யப்பட்டு மீண்டும் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
காலையில் பேனர் கிழிக்கப்பட்டு மாலையில் சரி செய்யப்பட்ட சரி செய்யப்பட்ட சம்பவம் அதிமுக நடுநிலை தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“