அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து (நவ.7) உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு முறையிடப்பட்டது.
இதையடுத்து, உரிய நடைமுறைகள் முடிந்துவிட்டால், வெள்ளிக்கிழமை (நவ.10) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தன் அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக, அதிமுக கட்சிக்கொடி இன்றி, ஓபிஎஸ் காரில் பயணித்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன் சிங்கப்பூருக்கு சென்ற ஓபிஎஸ்-நேற்று சென்னை விமான நிலையம் வந்தார். தொடர்ந்து அவர் வழக்கமாக பயன்படுத்தும் காரில் அதிமுகவின் கட்சி கொடி இல்லாமல் விமான நிலையத்திலிருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு சென்றார்.
இதுதொடர்பாக தந்தி டிவியில் வெளியான வீடியோ
https://www.thanthitv.com/news/politics/ops-traveled-in-a-car-without-aiadmk-party-flag-for-the-first-time-225226
இதனிடையே ஓ.பி.எஸ். தன் ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்று (நவம்பர் 09) கலந்து ஆலோசிக்கிறார.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“