அ.தி.மு.க பொதுக் குழு தொடர்பான வழக்கில், கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஒன்றைத் தலைமை விவகாரம் பூதாகரமானதையடுத்து. கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து இருவரும் நீதிமன்றங்களில் சட்டப்போராட்டம் நடத்தினர். இதையடுத்து சமீபத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில்,
எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பதிவேற்றம் செய்ய கோரிக்கை விடுக்க உள்ளனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் பொதுக் குழு செல்லும் என்று மட்டுமே தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், தீர்மானங்கள் தொடர்பாக தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். எனவே அதிமுக சட்ட விதிகளில் எந்த மாற்றங்களையும் செய்ய வேண்டாம் எனவும் அவர் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“