கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக் கோரி தி.மு.க.வை சேர்ந்த வி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், “சம்பந்தப்பட்ட சிலையை அ.தி.மு.க.வை சேர்ந்த வி.யு.மருதாச்சலம் என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலையை மட்டுமல்லாது அங்கிருந்த பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளையும் அகற்ற உத்தரவிட்டனர்.
அதாவது புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை மட்டுமல்லாது அனைத்து சிலைகளையும் அகற்ற உத்தரவிட்டனர்.
பொது இடங்களில் தலைவர்களின் சிலைகளை அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே சில வழிமுறைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“