Advertisment

உடல் உறுப்பு தானம் செய்தோரை கௌரவித்த மக்கள் சக்தி இயக்கத்தினர்

உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழப்புணர்வை பரப்புவதற்க்காக மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தானம் செய்யும் குடும்பத்தினருக்கு உதவி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.

author-image
WebDesk
New Update
organ

 உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழப்புணர்வை பரப்புவதற்க்காக மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தானம் செய்யும் குடும்பத்தினருக்கு உதவி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.

Advertisment

 இதுகுறித்து மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் நீலமேகம் நம்மிடம் தெரிவிக்கையில்; நம் உடலில் உள்ள உறுப்புகளை நம் காலத்துக்குப் பின்பு மற்றவர்களுடைய பயன்பாட்டுக்காகத் தானமாக வழங்குவது உடல் உறுப்பு தானம். நம் உடலையே மருத்துவக்கல்விக்காகத் தானமாக வழங்குவதுதான் உடல் தானம்.

 தனிநபர்கள் இறந்த பிறகு அவர்களின் ஆரோக்கியமான உறுப்புகளை தானம் செய்ய ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மக்கள் சக்தி இயக்கம். மனிதனின் சிறுநீரகங்கள், இதயம், கணையம், கண்கள் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்பு தானம் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவும்.

 சிறுநீரகம், நுரையீரல், இதயம், கண்கள், கல்லீரல், கணையம், சிறுகுடல், தோல், திசுக்கள், எலும்புகள் ஆகியவற்றை தானம் செய்யலாம். அதே போல உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடல்கள் பாதுகாப்பான முறையில் சிதைவடையாமல் ஒப்படைக்கப்படுகின்றன. நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பேர் உடல் உறுப்புகள் கிடைக்காமல் மரணத்தை தழுவுகின்றனர்.

அதனால் மக்கள் முடிந்த வரை உறுப்புகளை மண்ணுக்கு கொடுக்காமல், மனிதர்களுக்கு கொடுப்போம். இப்படி உடல் தானம், உடல் உறுப்பு தானம் செய்ய குடும்பத்தினர்களை   சந்தித்து அவர்களின் குடும்ப நிலை அறிந்து திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நிதி உதவியுடன், பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகிறோம்.

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இதுவரை உடல் உறுப்பு தானம் செய்த 10 குடும்பத்தினருக்கு மேல் நிதியுதவி, பாராட்டுச்சான்றிதழ் கொடுத்து இருக்கிறோம்.

அந்தவகையில், கடந்த 16.09.23 மாலை 5.00 மணியளவில் திருச்சி திருவெறும்பூர் குமரேசபுரத்தை சேர்ந்த தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து அவரது விரும்பப்படி, அவரது குடும்பத்தினர் திருச்சி அரசுப் பொது மருத்துவமனைக்கு கண்களை தானமாகவும், அவரது உடலை திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாகவும் வழங்கியதை அறிந்து அவரது குடும்பத்தினரை பாராட்டி பொன்னாடை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கியதன் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுதி வருகின்றோம் என்றார்.

மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் வெ.ரா.சந்திரசேகர் தலைமையில், கே.சி. நீலமேகம், ஆர்.இளங்கோ, போத்தனூர் ஆர்.ரெங்கநாதன், மே.க.கோட்டை சந்திரசேகர், மணப்பாறை நா.வை.சிவம் மற்றும் பலர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

க.சண்முகவடிவேல்

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment