ஹாய் கைய்ஸ் : ஆஸ்கர் விருது வென்ற கொரிய படம் மீது வழக்கா? - இயக்குனர் 'பரபர' பதில்
Hi guys : அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் குடிநீர் பாட்டிலை சேர்த்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை ரூ.13க்கு விற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
வாங்க, இன்றைய நிகழ்ச்சிக்கு போவோம்..
ஆஸ்கர் விருது வென்ற கொரிய படம் பாரசைட் படத்தின் இயக்குனர் மீது வழக்கு தொடுக்கப்படுமா என்ற கேள்விக்கான விடை விரைவில் கிடைக்கும் என்று மின்சாரக்கண்ணா படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
விஜய், ரம்பா நடிப்பில் 1999ம் ஆண்டில் வெளியான மின்சாரக்கண்ணா படத்தின் கதையை, பாரசைட் படம் ஒத்திருப்பதாக சிலநாட்களாக சமூகவலைதளங்களில் தகவல் பரவிவந்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுவந்த நிலையில், இயக்குனர் கே எஸ் ரவிகுமாரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
காதல் என்ற காற்றை சுவாசிக்காதவர்களை எண்ணிவிடலாம். உடலுக்கு இதயம் போல, வாழ்க்கைக்கு காதல் உயிர் போல மதிக்கப்படுகிறது. ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறத்தை கடந்து இரு இதயங்கள் இணைவதுதான் உண்மையான காதல். உலகம் முழுவதும் காதலர்களால் ஆண்டுதோறும் பிப்., 14ல் 'காதலர் தினம்' கொண்டாடப்படுகிறது.
ஹேப்பி வேலன்டைன்ஸ் டே..
தேர்தலில் ஓட்டளிக்க விரும்பும் வாக்காளர்கள், சொந்த ஊரில் ஓட்டளிக்க முடியாமல் போனால், அவர்கள் வசிக்கும் ஊரிலேயே ஓட்டளிக்க கூடிய தொழில்நுட்பத்தை, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் உருவாக்கி வருவதாக, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்தார்.
வரவேற்கத்தக்க முயற்சி..
கேரளாவில், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.13க்கு மட்டுமே விற்க வேண்டும். கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் குடிநீர் பாட்டிலை சேர்த்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை ரூ.13க்கு விற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு அந்த மாநில மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
மக்கள் முதல்வர்
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye