மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைம் மத்திய அரசின் பல்வேறு உயர் பதவிகளுக்கு தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில் இன்று நாடு முழுவதும் அமலாக்கத் துறை, கணக்காளர், உதவி வருங்கால வைப்பு நிதி அதிகாரி பதவிகளுக்கான யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெறுகிறது. கோவையில் 8 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சுமார் 7,815 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை இரு வேளைகளில் தேர்வு நடைபெறுகிறது.
Advertisment
இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவையில் 8 மையங்களில் தேர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 8 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 171 அறைக் கண்காணிப்பாளர்கள், மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், 163 அறைக் கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 334 அறை கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை செயலர் நிலையில் அலுவலர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Advertisment
Advertisements
மேலும், தேர்வு மையங்களுக்கு செல்ல உக்கடம், சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“