/tamil-ie/media/media_files/uploads/2020/07/image-7-1.jpg)
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.அமுதா பிரதமர் அலுவலகத்தில் (பிஎம்ஓ) இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை சிறப்பாக ஒருங்கிணைத்ததன் மூலம் தமிழக மக்களின் அன்பை பெற்றவர்.
முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் இறுதி சடங்கினை சாதுரியமாக நடத்திய திருமதி# அமுதா ஐஏஎஸ் அவர்களுக்கு
பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பதவி
வாழ்த்துக்கள் மேடம் ???????????? pic.twitter.com/wZz0yrRZnW
— Thiagarajan S (@thiagarajan_dmk) July 21, 2020
1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த அமுதா, கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு தலைவர்களின் ஆட்சியில், சுகாதாரம் பெண்கள் மேம்பாடு, நில மேலாண்மை, பேரிடர் மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிவர். தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையராக இவர் ஆற்றிய பணிகள் இன்றும் நினைவு கூறப்படுகிறது.
Sudhir Kumar appointed as Additional Secy in CVC, @suraiya95 moves to Dept of Animal Husbandary and Dairying from Delhi Govt; P Amudha appointed as Joint Secy in PMO. pic.twitter.com/fCwvF9OMeU
— Arvind Gunasekar (@arvindgunasekar) July 20, 2020
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மசூரியில் உள்ள ஐஏஎஸ் அகாதமியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த அமுதாவுக்கு பிரதமர் அலுவலகத்தில் (பிஎம்ஓ) இணை செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.