தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நேரில் சாட்சியம் அளித்த ப.சிதம்பரம்
10 ஆண்டுகளாக நடந்துவரும் தேர்தல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.

p chidambaram appeared at chenani high court, ப சிதம்பரம், தேர்தல் வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த ப சிதம்பரம், p chidambaram confessed at chenani high court, election case against p chidambaram, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil, தமிழ், சென்னை, தமிழ்நாடு, tamil news live, latest news in tamil, latest tamil news, tamil latest news, tamil nadu newsraja kannappan, p chidambaram, election case, congress leader p chidambaram
10 ஆண்டுகளாக நடந்துவரும் தேர்தல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
Advertisment
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...
கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் நேரில் ஆஜராகி சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார். அப்போது, அவரிடம் ராஜகண்ணப்பன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது, தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்பு கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு சென்றது குறித்தும் ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் ராஜகண்ணப்பன் தரப்பில் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை ப.சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார்.
இதையடுத்து, குறுக்கு விசாரணை முடிவடையாததால், விசாரணையை மார்ச் 9 ஆம் தேதிக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தள்ளிவைத்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"