சிவகங்கை பேருந்து நிலையம் விரிவாக்கம் பணிக்காக, தனது மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஆகிய இருவரின் நிதியிலிருந்து தலா ஒரு கோடி விகிதம், 2 கோடி ரூபாய் தொகைக்கான காசோலையை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், சிவகங்கை நகர மன்ற தலைவர் துரைஆனந்த் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் வழங்கினார்
இதன்பின்னர், ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையினரின் சாகசம் பாராட்டுக்குரியது என்றும், ஆனால், அங்கு ஏற்பட்ட உயிரிழப்பு துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பேசுகையில், “சென்னை மெரினாவில் 15 லட்சம் பேரர் ணுவ வீரர்களின் வான்வெளி சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தது வரவேற்கத்தக்கது. அங்கு கூட்ட நெரிசலில் இறந்தததாக தெரியவில்லை. மயக்கம், சில நோய்களால் இறந்தது போல் தெரிகிறது.
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்து உயிரிழந்தவர்களின் இழப்பு என்பது துரதிர்ஷ்டவசமானது, விமானப்படையின் சாகசம் பாராட்டுக்குரியது. உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்கும் என நம்புகிறேன்.
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் கருத்து. ஓராண்டு போர் நீடிப்பது நல்லதல்ல, போர் நிறுத்த வேண்டும் என்பதை பிரதமர் பேசியுள்ளார். அதனை காங்கிரஸ் உட்பட எல்லா கட்சியினரும் ஏற்றுக்கொள்கிறோம்.
இஸ்ரேல் - ஈரான் போர் நடைபெற்று வருவதால் எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடுமையான விலை உயர்வு இருக்கும் எனக் கூற முடியாது. கணிசமாக எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது. நாளை தேர்தல் முடிவு தெரிய வரும் ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன். கருத்துக்கணிப்புகளும் அரசியல் வல்லுநர்களும் பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறுவதை சுட்டி காட்டினார்.
தி.மு.க தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கட்டுக்கோப்பாக உள்ளது. தி.மு.க தலைமையிலான எங்கள் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆட்சியில் பங்கு என சிலர் பேசுகின்றனர். ஜம்மு காஷ்மீரில் ஆர்டிகல் 370 பிரிவை நீக்குவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளிக்கவில்லை. மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“