இன்று போல என்றென்றும் மக்கள் சேவை செய்ய வேண்டும்; சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

P.Chidambaram receiving birthday wishes letter from PM Modi: மு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிர்பாராத வகையில் பிரதமர் மோடி தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

By: Updated: September 24, 2019, 10:32:43 PM

P.Chidambaram receiving birthday wishes letter from PM Modi: மு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிர்பாராத வகையில் பிரதமர் மோடி தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் உள்ளார். ப.சிதம்பரத்தின் டுவிட்டர் கணக்கில் அவருடைய அறிவுறுத்தலின் பேரில் அவர் சார்பில் அவரது குடும்பத்தினர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி ப.சிதம்பரத்துக்கு பிறந்தநாள். அவருடைய பிறந்த நாளுக்கு எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியிடம் இருந்து தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதை ப.சிதம்பரத்தின் டுவிட்டர் பக்கத்தில் அவருடைய குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர். பிரதமர் மோடி அந்த கடிதத்தில், “உங்கள் பிறந்த நாள் அன்று என் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்று போல் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசிர்வதிக்கட்டும். வாழ்த்துக்களுடன் தங்கள் நேர்மையான நரேந்திர மோடி.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

@PMOIndia @narendramodi என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி. pic.twitter.com/HGbWnkCrim
— P. Chidambaram (@PChidambaram_IN) September 24, 2019

பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ப.சிதம்பரம், என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி என்று அவருடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே?
— P. Chidambaram (@PChidambaram_IN) September 24, 2019

இதனைத் தொடர்ந்து அடுத்த டுவிட்டில், “பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே?” என்று பதிவிட்டுள்ளார்.

தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 24, 2019

மேலும், தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன் என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:P chidambaram surprised on receiving pms birthday wishes letter

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X